/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவன்த் டே பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
செவன்த் டே பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 11, 2025 01:19 AM

புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலம் செவன்த் டே அட்வண்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் தேர்வு எழுதிய 132 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளியளவில் மாணவர் ரமணா 575 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் துதே ரோகன் 570 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி தர்ஷினி 559 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பாடவாரியாக மாணவர்கள் ரமணா, அப்துல் அஸ்லாம், அப்துல் சமீர், யுகம் ஆகிய 4 மாணவர்கள் கணினி அறிவியல் பாடத்திலும், கணினி பயன்பாடு பாடத்தில் மாணவர்கள் முக்தி, தமிழரசன் ஆகியோர் சென்டம் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றனர்.
பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் ஸ்பர்ஜன் சுகுமார், பள்ளியின் பொருளாளர் அப்பலோ ஜோசப் ஆகியோர் சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். நுாறு சதவீதம் தேர்ச்சிக்கு உதவிய ஆசிரியர்கள், பெற்றோர்களையும் வாழ்த்தினர்.