/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூனிச்சம்பட்டில் கழிவுநீர் பிரச்னை: அமைச்சர் ஆய்வு
/
கூனிச்சம்பட்டில் கழிவுநீர் பிரச்னை: அமைச்சர் ஆய்வு
கூனிச்சம்பட்டில் கழிவுநீர் பிரச்னை: அமைச்சர் ஆய்வு
கூனிச்சம்பட்டில் கழிவுநீர் பிரச்னை: அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூன் 25, 2025 03:11 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு காலனியில் குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீர் பிரச்னை தொடர்பான அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு செய்து, தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மண்ணாடிபட்டு தொகுதி, கூனிச்சம்பட்டு காலனி வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வாய்க்கால் வழியாக, பெருமாள் கோவில் எதிரே உள்ள குட்டையில் சென்று சேர்கிறது. இந்த கழிவுநீர் குட்டை தற்போது நிரம்பியுள்ளதால், கழிவுநீர் வெளியேற வழியின்றி, அப்பகுதி சாலை மற்றும் குடியிருப்புகளில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
புகாரின் பேரில், தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான நமச்சிவாயம் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, குட்டையில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றவும், குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மண்ணாடிபட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், பொதுப் பணித்துறை செயற்பொறி யாளர்கள் ராதாகிருஷ்ணன், பக்தவச்சலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.