/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் தேக்கம் : எம்.எல்.ஏ.,விடம் புகார்
/
கழிவுநீர் தேக்கம் : எம்.எல்.ஏ.,விடம் புகார்
ADDED : டிச 04, 2025 05:09 AM

அரியாங்குப்பம்: குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நின்றதால், அங்கு வசிப்பவர்கள் எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டனர்.
வீராம்பட்டினம் சாலை, காக்காயந்தோப்பு பகுதியில் சீனிவாச கார்டன் என்ற தனியார் குடியிருப்பில் 135 வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால் வசதி இல்லாமல் உள்ளது. அந்த பகுதியில் காலியான இடத்தில், பள்ளம் ஏற்படுத்தி, அங்கு வசிப்பவர்கள் கழிவுநீர் விட்டு வருகின்றனர். தேங்கும் அதிகப்படியான கழிவுநீரை, செப்டிக்டேங் வாகன மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டிட்வா புயலால், கனமழை பெய்தது. மழைநீருடன், கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதியில், தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. குடியிருப்பவர்கள் பாஸ்கர் எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டனர். கழிவுநீர் தேங்கி நின்ற இடத்தை எம்.எல்.ஏ., அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வி நாயகமூர்த்தி, உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சுரேஷ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். குடியிருக்கும் வில்லா, தனியாரிடம் உள்ளதால், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திடம் முறையாக ஒப்படைத்தால், மட்டுமே, கழிவுநீர் வாய்க்கால் கட்ட நவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

