/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குருவிநத்தம் அரசு பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்
/
குருவிநத்தம் அரசு பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்
குருவிநத்தம் அரசு பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்
குருவிநத்தம் அரசு பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்
ADDED : டிச 04, 2025 05:09 AM

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளியில், கராத்தே பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையும், போலீஸ் துறையும் இணைந்து, வீரமங்கை என்னும் பெண் குழந்தைகளுக்கான கராத்தே பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் துவக்க விழாவில், தமிழாசிரியர் இரிசப்பன் வரவேற்றார். தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். நல்லாசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார்.
பாகூர் போலீஸ் நிலைய காவலர்கள் கலைச்செல்வன், தேவதாஸ், இலக்கியா, ராஜலட்சுமி, ஜீவிதா, திவ்யா ஆகியோர் கராத்தே பயிற்சி செயல்முறைகள் குறித்து விளக்கமளித்தனர். பத்து நாட்கள் நடைபெறும் இம்முகாமில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியை சங்கரதேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன், கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி ஆகியோர் செய்திருந்தனர்.

