/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேக்கம்
/
சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேக்கம்
ADDED : ஏப் 02, 2025 03:53 AM

புதுச்சேரி : நுாறடி சாலை ரயில்வே சுரங்கப்பாதையில் பைப் உடைந்து, கழிவுநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
முதலியார்பேட்டை, ஜான்பால் நகர் உள்ளிட்ட நகர் பகுதியில் இருப்பவர்கள், இந்திரா சதுக்கம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல நீண்ட துாரம் சுற்றி, ரயில்வே மேம்பாலம் வழியாக சென்றனர். ரயில் பாதை கடக்க சிரமம் ஏற்பட்டதால், ரயில்வே மேம்பாலத்தில் கீழேசுங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்டு,மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.சுரங்கப்பாதை வழியாக கழிவுநீர் செல்லும் பைப் உடைந்து, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. பல நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.உடைந்த கழிவுநீரை பைப்பை உடனடியாக சீர் செய்ய, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

