ADDED : நவ 25, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், 32 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி சீனிவாச நகரில், கழிவுநீர் வாய்க்கால் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் வினாயகமூர்த்தி, உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சரஸ்வதி, சுரேஷ் உட்பட பலர் உடனிருந்த னர்.

