/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தையல் இயந்திரம் முதல்வர் வழங்கல்
/
தையல் இயந்திரம் முதல்வர் வழங்கல்
ADDED : பிப் 15, 2025 06:37 AM

புதுச்சேரி : ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தையல் பயிற்சி முடித்த மகளிர்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மகளிர்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சி காலங்களில் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2023-24ம் ஆண்டு தையல் பயிற்சி முடித்த 33 மகளிர்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார்.
இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணகுமார், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.