தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிவபூஜை மாநாடு இன்று துவக்கம்

 சிவபூஜை மாநாடு இன்று துவக்கம்

 சிவபூஜை மாநாடு இன்று துவக்கம்


ADDED : ஜன 09, 2026 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 08:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழக சைவநெறிக் கழகம் சார்பில், 24வது சிவபூஜை மாநாடு புதுச்சேரியில் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.

திருச்சியை தலைமை இடமாக கொண்ட தமிழக சைவநெறிக் கழகம் சார்பில், சேக்கிழார் பெருமான் விழா, பெரிய புராணம் நுால் வெளியீட்டு விழா, சிவஸ்ரீ தத்புருஷ தேசிகர் 27வது குருபூஜை, கழகத்தின் 24வது ஆண்டு விழா ஆகியன இணைந்து சிவபூஜை மாநாடு, முத்தியால்பேட்டை, முருகன் திருமண மண்டபத்தில் இன்று (9ம் தேதி) துவங்கி 10, 11 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.

விழாவிற்கு சேவாரத்ன சிவஸ்ரீ தத்புருஷ சரவண பவானந்த தேசிகர் தலைமை தாங்குகிறார். இன்று மாலை 5:00 மணிக்கு வாமதேவ காசி முத்து தேசிகர் மாநாட்டு கொடி ஏற்றுகிறார். புதுச்சேரி ராமலிங்கம், பேராசிரியர்கள் முருகசாமி, சிவ மாதவன், கழகத் துணைத் தலைவர் அகோர விஸ்வநாதன், தனமணி, வில்லியனுார் காமேஸ்வரன் முன்னிலை வகிக்கின்றனர்.

தொடர்ந்து குருநாதர் படத்திறப்பு, சேக்கிழார் அருளிய பெரியபுராணம் நுால் வெளியீடு நடக்கிறது. நுாலினை திருச்சி கணபதி வெளியிடுகிறார். வாமதேவ காசிமுத்து தேசிகர் சான்றோர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

நாளை (10ம் தேதி) காலை 6:00 மணிக்கு ஆன்மார்ந்த சிவபூஜை நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் சொற்பொழி, மதியம் 1:30 மணிக்கு மகேஸ்வர பூஜை நடக்கிறது. 11ம் தேதி காலை 6:00 மணிக்கு காசி விஸ்வநாதர் கோவில் வழிபாடு, குருபாத பூஜை நடக்கிறது. மாலை சொற்பொழிவு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us