தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜி.எஸ்.டி., உச்ச வரம்பு உயர்த்த சிவசங்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

 ஜி.எஸ்.டி., உச்ச வரம்பு உயர்த்த சிவசங்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

 ஜி.எஸ்.டி., உச்ச வரம்பு உயர்த்த சிவசங்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : பிப் 13, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கான ஜி.எஸ்.டி. பதிவுக்கான உச்ச வரம்பை ரூ. 40 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டுமென, சிவசங்கர் எம்.எல்.ஏ., பேசினார்

சட்டசபையில் அவர் பேசியதாவது:

புதுச்சேரியில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் நலன் கருதி, ஜி.எஸ்.டி. பதிவுக்கான உச்ச வரம்பை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டுமென, வியாபாரிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து சட்டசபையிலும் பலமுறை வலியுறுத்தப்பட்டது. உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது. இந்த உயர்வு, சிறு வணிகர்களின் வரி இணக்க சுமையைக் குறைத்து, அவர்களை ஊக்குவிக்கும். புதுச்சேரி வணிகர்கள் பெரிதும் பயனடைவர்.

ஒரு ஆண்டிற்கு ரூ. 40 லட்சம் வரை விற்பனை கொண்ட வணிகர்கள் ஜி.எஸ்.டி. பதிவு செய்ய தேவையில்லை. இது சிறு வணிகங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். சுற்றுலா மற்றும் வர்த்தக மேம்பாட்டின் மூலம் மாநில அரசுக்கான வரி வருவாய் தொடர்ந்து அதிகரிக்கும். ஆட்சியின் நிறைவு நேரத்தில் புதுச்சேரி வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us