sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செருப்பு கடை சூறை : பிரபல ரவுடி கைது

 செருப்பு கடை சூறை : பிரபல ரவுடி கைது

 செருப்பு கடை சூறை : பிரபல ரவுடி கைது


ADDED : நவ 13, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 06:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; அப்பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடைக்கு நேற்று மதியம் வந்த வாலிபர் ஒருவர் செருப்பு வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றார். கடையில் இருந்த பெண் ஊழியர், கடை உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோர் செருப்புக்கான பணத்தை கேட்டனர்.

ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையை சேதப்படுத்தி, சென்றார்.

ராஜேந்திரன் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் போலீசார் கடைக்கு விரைந்து விசாரித்தனர்.

கடையை உடைத்தவர் கோட்டக்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி முகமது உசேன், 27, என்பது தெரியவந்தது. கோட்டக்குப்பம் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர், மீது முத்தியால்பேட்டை போலீசில் 2 கொலை முயற்சி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்த சிவசங்கரன் எம்.எல்.ஏ., சூறையாடப்பட்ட கடையை பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us