ரூ. 10 ஆயிரம் ‘குட்கா’ பறிமுதல் கடை உரிமையாளர் மீது வழக்கு
ரூ. 10 ஆயிரம் ‘குட்கா’ பறிமுதல் கடை உரிமையாளர் மீது வழக்கு
ADDED : நவ 13, 2026 07:39 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,12) இரவு மூலகுளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
புதுநகர் பகுதியில் தனியார் கல்லுாரிக்கு அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கடையில் சோதனை நடத்தினர். அதில், உருளையன்பேட்டையை சேர்ந்த சக்திவேல்,33; என்பவர் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. அவர், மீது வழக்கு பதிந்த போலீசார், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
