UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கடலுார் மாவட்டம், நல்லாத்துார் செல்வம் மகன் தமிழரசன்,34; தனியார் கம்பெனி ஊழியர். இவர், கடந்த 9ம் தேதி மாலை இந்திரா சதுக்கம் பகுதியில் உள்ள கடையில் துணி எடுக்க அங்கிருந்த கடை அருகில் தனது பைக்கை (பிஒய்.01.விஏ,3879) நிறுத்தி விட்டு சென்றார்.
பின், திரும்பி வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. இது குறித்து அவர் அவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
