‘நானும் ரவுடி தான்’ என கெத்து காட்ட கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
‘நானும் ரவுடி தான்’ என கெத்து காட்ட கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : நவ 13, 2026 07:39 PM
புதுச்சேரி: ‘நானும் ரவுடி தான்’ என ஏரியாவில் கெத்து காட்ட கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீசார் நேற்று (நவ.,12) பிரியதர்ஷினி நகரில் ரோந்து சென்றனர். கண்டாக்டர் தோட்டம், தேவி கருமாரியம்மன் கோவில் அருகில் ஒரு வாலிபர் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்த அந்த வாலிபர் தப்பி செல்ல முயன்றார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் மகன் சேவியர், 26, என்பதும், அவரது கூட்டாளிகள் பாண்டாமணி, கபாலி உள்ளிட்டடோர் சிறைக்கு சென்று விட்டனர். இதனால், தன்னை யாரும் மதிப்பதில்லை என்பதால், நானும் ரவுடி தான் என எரியாவில் கெத்து காட்ட பொது மக்களை மிரட்டிது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவம்:
மங்கலம் போலீசார் நேற்று மதியம் வடமங்கலம் சாலையில் ரோந்து சென்றனர். அய்யனார் கோவில் அருகே பொதுமக்களை கத்தியை காட்டிய மிரட்டிய உறுவையாறு ஆறுமுகம் மகன் சந்தோஷ்,24; என்பவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
