/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரெஞ்சிந்திய பெண் இயக்குனர் இயக்கிய குறும்படம் வெளியீடு
/
பிரெஞ்சிந்திய பெண் இயக்குனர் இயக்கிய குறும்படம் வெளியீடு
பிரெஞ்சிந்திய பெண் இயக்குனர் இயக்கிய குறும்படம் வெளியீடு
பிரெஞ்சிந்திய பெண் இயக்குனர் இயக்கிய குறும்படம் வெளியீடு
ADDED : ஆக 23, 2025 05:06 AM

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த பிரெ ஞ்சிந்திய இளம் பெண் இயக்குனர் இயக்கிய குறும்படம் வெளியீட்டு விழா புதுச்சேரி அலியன்பிரான்சில் நடந்தது.
புதுச்சேரியை சேர்ந்தவர் டாஸ்லின் ஓமர்கட்டார், 25. இந்த இளம் பெண் திரைப்பட இயக்குனர், புதுச்சேரியின் தமிழ் கலாசார பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் 'குட்பை மாமாஜி' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த அனிமேஷன் திரைப்படம் அலியன் பிரான்சிஸ் அரங்கில் நேற்று மாலை திரையிடப்பட்டது. விழாவில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட அதனை சபாநாயகர் செல்வம் பெற்று கொண்டார்.
பின் முதல்வர் பேசுகையில், 'புதுச்சேரியின் கலாசாரம்,பண்பாட்டை அனிமேஷன் மூலம் இயக்கி இருப்பது மகிழ்ச்சி. புதுச்சேரியின் கலாசாரத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றுள்ள இயக்குனரை பாராட்டுகிறேன்' என்றார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அலியான்ஸ் பிரா ன்சிஸ் தலைவர் நலம் சதீஷ், விஷன் ஹோலிஸ்டிக், மேலாண் இயக்குனர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் இந்த குறும்படம் 20 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஸ்பெயின், மலேசிய நாடுகளின் விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது.