/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலில் போட்டியிடும் ஆட்சியாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா?
/
தேர்தலில் போட்டியிடும் ஆட்சியாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா?
தேர்தலில் போட்டியிடும் ஆட்சியாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா?
தேர்தலில் போட்டியிடும் ஆட்சியாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா?
ADDED : மார் 21, 2024 07:44 AM
புதுச்சேரி : முதல்வர், அமைச்சராக இருப்பவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கேள்வியை எழுப்பியுள்ள அரசியல் கட்சியினர், இதற்கான பதிலை தேர்தல் துறையிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நன்னடத்தை விளக்க கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் அமைச்சர் பதவியில் இருப்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நிற்க வேண்டுமா அல்லது ராஜினாமா செய்யாமல் லோக்சபா தேர்தலில் நிற்க முடியுமா என கிடுக்கிபிடி கேள்வியை முன் வைக்கப்பட்டது.
இதற்கு தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் நிற்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால், கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சபாநாயகர் பதவியை மட்டும் தான் லோக்சபா தேர்தலுக்காக ராஜினாமா செய்தனர்; எம்.எல்.ஏ.,வாக பதவியில் தொடர்ந்தனர்' என்று பதில் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்த குறுக்கிட்ட கலெக்டர் குலோத்துங்கன், 'இந்த விஷயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கம் அளிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
அரசியல் கட்சியினர் கூறும்போது, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவர்கள் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்க கூடாது என்று சொல்லப்பட்டாலும், சில விதிவிலக்குகள் உள்ளன.
அமைச்சராக இருப்பவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 102ல் விலக்கு உள்ளது. இதேபோல் 1959ல் இயற்றப்பட்ட பார்லிமெண்ட் உறுப்பினர் தகுதி இழப்பு சட்டத்திலும் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.எனவே அமைச்சர்கள் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் போட்டியிட முடியும். லோக்சபா தேர்தலில் வெற்றிப் பெற்றால், அதன் பிறகு ராஜினாமா செய்தால் போதுமானது. இது தொடர்பாக தெளிவாக விளக்கத்தை தேர்தல் துறை வெளியிட வேண்டும்' என்றனர்.

