/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தணிக்கை குழு கூட்டத்தை சபாநாயகர் நடத்துவதா? அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்
/
தணிக்கை குழு கூட்டத்தை சபாநாயகர் நடத்துவதா? அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்
தணிக்கை குழு கூட்டத்தை சபாநாயகர் நடத்துவதா? அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்
தணிக்கை குழு கூட்டத்தை சபாநாயகர் நடத்துவதா? அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்
ADDED : டிச 17, 2024 05:11 AM
புதுச்சேரி: சட்டம் மற்றும் மரபுகளை மீறி தணிக்கை குழு கூட்டத்தை சபாநாயகர் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
புதுச்சேரி அரசின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்யும் மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை மீது சரிவர கணக்குகளை சமர்ப்பிக்காத அரசு துறைகளுக்கு விளக்கம் கேட்டு ஏனாம் பகுதியில் பொது கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டு குழுக்களின் தணிக்கை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இவ்விரு குழுக்களிலும் உறுப்பினராக இல்லாத சபாநாயகர், சட்ட மரபுகளை மீறி தனது தலைமையில் தணிக்கை குழு கூட்டத்தை நடத்தவது பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும்.
மேலும், இவ்விரு குழுக்களின் தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைத்து, அதிகாரத்தை கையிலெடுப்பது விதிகளுக்கு புறம்பானது. இதனை அரசும் கவர்னர் தடுத்து நிறுத்தாதது வியப்பாக உள்ளது.
மத்திய தணிக்கை குழு அறிக்கை மீது முறையான விசாரணை நடைபெற்று அதில் தவறு இருப்பின் அது குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட குழு சட்டசபையில் வைத்தால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மட்டுமே சபாநாயகருக்கு உண்டு.
பொதுக்கணக்கு குழுவின் தலைவரும், தி.மு.க.,வை சேர்ந்த மதிப்பீட்டு குழு தலைவரும், பா.ஜ.,வை சேர்ந்த சபாநாயகரின் இந்த அத்துமீறிய செயலுக்கு துணை போவது என்பது தி.மு.க., விற்கும் பா.ஜ.,விற்கும் உள்ள ரகசிய உறவின் வெளிப்பாடு.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க., குறித்து அநாகரீகமாக பேசியது கண்டிக்கத்தக்கது. மற்றவர்களை பற்றி பேசும் போது நாவடக்கத்துடன் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.