/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆயுஷ் மருத்துவமனையில் சித்தா சிறப்பு முகாம்
/
ஆயுஷ் மருத்துவமனையில் சித்தா சிறப்பு முகாம்
ADDED : ஜன 02, 2024 04:19 AM
வில்லியனுார் : வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையில் அகத்தியர் பிறந்தநாளை முன்னிட்டு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடந்தது.
புதுச்சேரி அரசு, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவை இணைந்து வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையில் நடத்திய 7வது சித்தா திருநாள் சிறப்பு மருத்துவ முகாமிற்கு எதிர்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் இந்திரா முன்னிலை வகித்தார். சித்தா மருத்துவர் நர்மதா வரவேற்றார்.
விழாவையெட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இயற்கை முறை உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில், அகில இந்திய வானொலி நிலைய இணை இயக்குநர் சிவக்குமார், ஆசிரியர்கள் தனலட்சுமி, நித்யா மற்றும் தி.மு.க.,நிர்வாகிகள் மணிகண்டன், ஹரிகிருஷ்ணன், கந்தசாமி, ராஜி, அங்காளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனை சித்தா மருத்துவ பிரிவு டாக்டர் ஹேமலதா மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

