
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தை சீரமைக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி, சாரத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் உள்ள கட்டடம் தற்போது மிகவும் சேதமடைந்து மேல்தள சிமென்ட் காரைகள் உடைந்து விழுந்து வருகிறது.
இந்நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில், முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.
போராட்டத்தில், சேதமடைந்துள்ள கட்டடத்தில் இயங்கி வரும் மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

