/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காண ட்ரோன் மூலம் சிக்னல்கள் ஆய்வு
/
டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காண ட்ரோன் மூலம் சிக்னல்கள் ஆய்வு
டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காண ட்ரோன் மூலம் சிக்னல்கள் ஆய்வு
டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காண ட்ரோன் மூலம் சிக்னல்கள் ஆய்வு
ADDED : செப் 19, 2024 02:03 AM
புதுச்சேரி: போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண ட்ரோன் மூலம் சிக்னல்கள், முக்கிய சந்திப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண முக்கிய சந்திப்பு, டிராபிக் சிக்னல்களின் தற்போதைய நிலைமை கண்டறிய, ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி உத்தரவின்பேரில், கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்புகளில் ட்ரோன்கள் மூலம் வாகனங்கள் மற்றும் சாலைகளின் அகலத்தை படம் பிடித்தனர்.
போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்திலும், போக்குவரத்து குறைவாக உள்ள அதிகாலை நேரத்தில் என இரண்டு விதமாக ட்ரோன் மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கின்றனர். இதனை போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து டிராபிக் பிரச்னை தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்.