/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையை சரி செய்ய கோரி கையெழுத்து இயக்கம்
/
சாலையை சரி செய்ய கோரி கையெழுத்து இயக்கம்
ADDED : அக் 27, 2025 01:33 AM

புதுச்சேரி: சின்னையான்பேட்டையில் சாலையை சரி செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது.
தட்டாஞ்சாவடி தொகுதி, சின்னையான்பேட்டையில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சாலைகளை சீரமைத்து இருபுறமும் சைடு வாய்க்கால் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. ஆனாலும் சாலை போடப்படவில்லை.
இதனை கண்டித்து இந்திய கம்யூ., சின்னையான்பேட்டை கிளையின் சார்பில்., பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இந்திய கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் சேதுசெல்வம், எழிலன், மாநில குழு உறுப்பினர் செல்வம், தொகுதி குழு உறுப்பினர் பிரதீபன், கிளைச் செயலாளர் ரகு, கிளை துணைச் செயலாளர் பிரதீப், பொருளாளர் ஐயப்பன் கலந்து கொண்டனர்.

