/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து கோரி கையெழுத்து இயக்கம்
/
மாநில அந்தஸ்து கோரி கையெழுத்து இயக்கம்
ADDED : ஜூன் 17, 2025 12:35 AM

புதுச்சேரி: மாநில அந்தஸ்து கோரி நேரு எம்.எல்.ஏ., நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தில், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் நேற்று கையெழுத்திட்டார்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டி உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, டில்லி சென்று கோரிக்கையை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும், ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசிடம் மனுவாக அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, கையெழுத்து இயக்கத்தை துவங்கிய நேரு எம்.எல்.ஏ., அதில் முதல் கையெழுத்தை முதல்வர் ரங்கசாமியிடம் பெற்றார். தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்களிடம் கையெழுத்துகளைபெற்று வருகிறார்.
இந்நிலையில், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகனை, நேற்று சந்தித்து கையெழுத்து பெற்றார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்பு தலைவர்கள் உடனிருந்தனர்.