ADDED : ஜன 30, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம், இந்திராகாந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.
தலைமை ஆசிரியை கவிதா தலைமை தாங்கினார். ஆசிரியர் கலைவாணி தொகுத்து வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர் முன்னிலை வகித்தார்.
விழாவில், ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு, சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
சிலம்பம் பயிற்சியாளர்கள் சங்கர், முத்துக்குமரன் மேற்பார்வையில், பயிற்சி பெற்ற மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர். ஆசிரியர் ஜான் அந்தோணி, பிரபு, ஈஸ்வரன், வெங்கடேசன், ருக்குமணி, பூங்கொடி, உதயபானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.