UPDATED : நவ 21, 2026 11:18 PM
ADDED : நவ 21, 2026 11:18 PM

புதுச்சேரி: புதுச்சேரி அமலோற்பவம் வெள்ளிவிழா சுழற்கோப்பை 17ம் ஆண்டு வினாடி வினா போட்டி நடந்தது.
அமலோற்பவம் கல்விக்குழுமம் சார்பில், பள்ளிகளுக்கு இடையேயானா 17ம் ஆண்டு வினாடி வினாப் போட்டி அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி லுார்து உள்ளரங்க வளாகத்தில் நட்தது.
இதில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை, முதுநிலை என இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டியில் ஒவ்வொறு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது.
அதன்படி இளநிலை பிரிவில் திருக்கனுார் பிரைனி ப்ளும்ஸ் இன்டர்நேஷன் சி.பி.எஸ்.இ., பள்ளி முதலிடம், மூலகுளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி இரண்டாமிடம், புதுச்சேரி எம்.ஜி.ரோடு பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன.
முதுநிலை பிரிவில் புதுச்சேரி எம்.ஜி., ரோடு பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி முதலிடம், விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் சென்ட்ரல் ஸ்கூல் இரண்டாமிடம், மூலகுளம் ஸ்டான்ஸ்போர்ட் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மூன்றாமிடம் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
