/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிங்காரவேலர் பிறந்த நாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
/
சிங்காரவேலர் பிறந்த நாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
சிங்காரவேலர் பிறந்த நாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
சிங்காரவேலர் பிறந்த நாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
ADDED : பிப் 19, 2024 04:52 AM

புதுச்சேரி: சிங்காரவேலர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி அரசு சார்பில் புதுச்சேரி-கடலுார் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தேனீஜெயக்குமார், அரசு கொறாடா ஆறுமுகம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாசள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். தி.மு.க., சார்பில், எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தமிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், சக்திவேல், இளம்பரிதி, தொகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூ., சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், நிர்வாக உறுப்பினர்கள் அந்தோணி, அமுதா, மாநில குழு உறுப்பினர்கள் அபிேஷகம், கீதநாதன், பெருமாள், பெஞ்சமின் ஆகியோர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் பல்வேறு மீனவ அமைப்பினர்.சங்க நிர்வாகிகள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

