/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சீதா ராமர் பட்டாபிேஷகம்
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சீதா ராமர் பட்டாபிேஷகம்
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சீதா ராமர் பட்டாபிேஷகம்
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சீதா ராமர் பட்டாபிேஷகம்
ADDED : ஏப் 17, 2025 04:51 AM

புதுச்சேரி: புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், சீதா ராமர் பட்டாபிேஷக விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி, காமாட்சி அம்மன் கோவில் வீதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ராம நவமி, சீதாராமர் திருக்கல்யாணம் மற்றும் ராமர் பட்டாபிேஷக விழா கடந்த 6 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக, நேற்று காலை சீதா ராமர் பட்டாபிேஷகம் விழா நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாரானையும், காலை 10:00 மணிக்கு அனுக்ஞை, மகா சங்கல்பம், விக்னேஸ்வரா பூஜை, புஷ்பாஹவிசனம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீஸூக்த மற்றும் பட்டாபிேஷக ஹோமங்கள், பூர்ணாஹூதியும், காலை 11:30 மணிக்கு சீதா ராமருக்கு பட்டாபிேஷகம், மகா தீபாரதனை நடந்தது.
விழாவில், திராளனபக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
சீதா ராமர் பட்டாபிேஷக ஏற்பாடுகளை பாண்டிராம் சில்க்ஸ் மற்றும் பாண்டிராம் தங்க நகை மாளிகை உபயதாரர்கள் மற்றும் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.