/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜன 11, 2025 06:52 AM

காரைக்கால்: காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங் துறை சார்பில், டிப்ளமோ இன்ஜினியர்களின் தொழில் துவக்க பயிற்சி என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
பயிற்சியை கல்லுாரி முதல்வர் சந்தனசாமி துவக்கி வைத்து பேசுகை யில், கருத்தியல் பாடங்களை நன்கு புரிந்த கொண்டு செய்முறை திறன்களையும் உலக போட்டிக்கு ஏற்ப வளர்த்து கொள்ள வேண்டும்' என்றார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வுகளில், ஆய்வக பயிற்றுநர்கள் புனிதவதி, சங்கீதா ஆகியோர் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
பயிற்சியின் முடிவில் டிஜிட்டல் ஐ.சி., பவர் சப்ளை யூனிட்டுகளை தயாரித்து கல்லுாரி ஆய்வகத்திற்கு வழங்கினர். முகாமில் இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங் துறை மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் விமலன், ராஜபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.