தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுய உதவிக்குழு பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சுய உதவிக்குழு பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சுய உதவிக்குழு பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஆக 21, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ‘காகிதக் கழிவு மறுசுழற்சி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்’ தலைப்பில் மூன்று நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கரிக்கலாம்பாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.

புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டுக் குழுமத்தின் கீழ் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சத்தின் சார்பில், நடந்த பயிற்சியை மோகன்தாஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

சுற்றுச்சுழல் பொறியாளர் காளமேகம் வரவேற்றார். சமூக சேவை சங்கத்தின் தலைவர் சகாயமேரி, காகிதக் கழிவுகளை முறையாக பயன்படுத்தி, அவற்றை மறுசுழற்சி செய்து பயனுள்ள மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய சிறு தொழில் மற்றும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார். 

பயிற்சியில் காகிதக் கழிவுகளை சேகரித்தல், வகைப்படுத்துதல், மறுசுழற்சி செய்தல், காகிதக் கூழ் தயாரித்தல் மற்றும் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குதல் தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

காகிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் ‘கழிவிலிருந்து செல்வம்’ என்ற கருத்தை நடைமுறைப் படுத்துவதுடன், கழிவு உருவாக்கத்தை குறைத்து, இயற்கை வளங்களை பாதுகாத்து, சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க முடியும். திட்ட அலுவலர் நித்தியா நன்றி கூறினார்.

பயிற்சியில் பங்கேற்கும் 30 சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us