ADDED : ஆக 21, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அடையாளம் தெரியாத இறந்து கிடந்த முதியவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனுார் கோனேரிகுப்பம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 19ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
