ஆதரவற்றோர் இல்லங்களில் எஸ்.கே.வி., நிறுவனம் தீபாவளி கொண்டாட்டம்
ஆதரவற்றோர் இல்லங்களில் எஸ்.கே.வி., நிறுவனம் தீபாவளி கொண்டாட்டம்
UPDATED : நவ 10, 2026 10:27 AM
ADDED : நவ 10, 2026 10:25 AM
புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எஸ்.கே.வி. பில்டர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து, புதுச்சேரியில் உள்ள இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
உப்பளம் பகுதியில் உள்ள ரெயின்போ பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் சந்தோஷி நண்பன் குழந்தைகள் காப்பகம் ஆகிய இடங்களில் நடந்த கொண்டாட்டத்தில் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் இல்லத்தில் உள்ள 300க்கு மேற்பட்டோருக்கு உணவு பகிர்ந்து கொண்டதுடன், அவர்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கினர்.
மேலும், எஸ்.கே.வி. நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் குடும்பமாக பங்கேற்று, குழந்தைகள் மற்றும் இல்லத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.தீபாவளி என்பது நம்முடைய மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடும் பண்டிகையல்ல. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு நல்வாய்ப்பு என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது.
