தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போனஸ் வழங்காததை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்: துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி

போனஸ் வழங்காததை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்: துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி

போனஸ் வழங்காததை கண்டித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்: துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி


UPDATED : நவ 10, 2026 10:27 AM

ADDED : நவ 10, 2026 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:27 AM ADDED : நவ 10, 2026 10:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போனஸ் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட திடீர் போராட்டத்தால் நகரம் முழுவதும் குப்பைகள் தேங்கி, மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சி உட்பட்ட 14 சட்டசபை தொகுதிகளில் கிரீன் வாரியர்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் குப்பை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி, பணியாளர்கள் அனைவரும் திடீரெனப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகம், மறைமலையடிகள் சாலையில் உள்ள திருவள்ளுவர் பஸ்டாண்ட்டில் திரண்ட அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 8 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்தம்பித்த புதுச்சேரி



துாய்மை பணியாளர்களின் போராட்டத்தால் புதுச்சேரி நகரம் முழுவதும் சேகரிக்கப்பட வேண்டிய குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே தெருக்களிலேயே தேங்கின. இதனால் நகரம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது.

மேலும், குப்பை வாகனங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கு வளாகத்தில் நிறுத்திவைத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை



துாய்மைப் பணியாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது போனஸ் வழங்கினால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என உறுதியாகத் தெரிவித்தனர்.

போனஸ் வழங்க ஒரு வாரம் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை துாய்மை பணியாளர்கள் ஏற்றுக்கொண்டு போராட்டம் தற்காலிகமாகக் கைவிட்டனர்.

போராட்டம் வாபஸ் பெறப்பட்ட போதிலும், கிரீன் வாரியர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வாகன டிரைவர்கள் சிலர் உடனடியாக வாகனங்களை இயக்க முன்வரவில்லை.

இதையடுத்து, கிராமப்புறங்களில் இயங்கி வரும் வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் அவசரமாகப் புதுச்சேரி நகர்ப்பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உளவுத்துறை விசாரணை..


துாய்மைப் பணியாளர்களின் இந்தத் திடீர் போராட்டத்திற்குப் பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்த சில அமைப்புகளின் துாண்டுதல் உள்ளதா என புதுச்சேரி உளவுத்துறையினரும் உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாக்குவாதம்: பேச்சுவார்தையின் போது தொழிலாளர்கள் கிராமப்புறத்தில் துாய்மை பணி மேற்கொள்ளும் நிறுவனம் போனஸ் தரும்போது, நீங்கள் ஏன் தரவில்லை என சராமரியாக கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us