தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எதிரியை கொல்ல வெடி பொருட்கள் வைத்திருந்தவர் கைது

எதிரியை கொல்ல வெடி பொருட்கள் வைத்திருந்தவர் கைது

எதிரியை கொல்ல வெடி பொருட்கள் வைத்திருந்தவர் கைது


UPDATED : நவ 10, 2026 10:27 AM

ADDED : நவ 10, 2026 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:27 AM ADDED : நவ 10, 2026 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாணரப்பேட்டையில் எதிரியை கொல்ல வெடிகுண்டு தயாரிப்பு பொருட்களுடன் பதுங்கி இருந்த நபரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, வாணரப் பேட்டை பள்ளி வீதி சந்திப்பில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் பதுங்கி இருப்பதாக, ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.

இதையடுத்து, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, போலீசாரை கண்ட வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள், கயிறு உள்ளிட்ட பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், வாணரப்பேட்டை, நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (எ) சுகுமார், 22; என்பதும், கடந்த 6 மாதத்திற்கு முன் வாணரப்பேட்டைச் சேர்ந்தவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு தயாரிக்க பதுங்கி இருந்ததும் தெரிந்தது.

ஸ்ரீகாந்த் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். ஸ்ரீகாந்த் மீது ஏற்கனவே, போக்சோ மற்றும் நாட்டு வெடிகுண்டு வீச்சு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us