ADDED : அக் 20, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : கான்பெட் நிறுவனம் சார்பில், நேற்று இரவு புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி கான்பெட் கூட்டுறவு நிறுவனம் சார்பில் புதுச்சேரி கொக்கு பார்க், காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி மற்றும் காரைக்காலில் தீபாவளி பட்டாசு பஜார் திறக்கப்பட்டுள்ளது. அதனை பிரபலப்படுத்தும் விதமாக புதுச்சேரி கடற்கரை சாலை, தலைமை செயலகம் எதிரில் உள்ள கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. வாண வேடிக்கை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் கான்பெட் நிறுவனம் மேலாண் இயக்குநர் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.