தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புது பஸ் ஸ்டாண்டில் 13 மாதங்களாக மின் இணைப்பு இல்லாத சிறு கடைகள்: தரமற்ற ஒயர்களால் வந்த பிரச்னை

புது பஸ் ஸ்டாண்டில் 13 மாதங்களாக மின் இணைப்பு இல்லாத சிறு கடைகள்: தரமற்ற ஒயர்களால் வந்த பிரச்னை

புது பஸ் ஸ்டாண்டில் 13 மாதங்களாக மின் இணைப்பு இல்லாத சிறு கடைகள்: தரமற்ற ஒயர்களால் வந்த பிரச்னை


UPDATED : அக் 10, 2026 06:02 PM

ADDED : அக் 10, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 06:02 PM ADDED : அக் 10, 2026 05:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, மறைமலையடிகள் சாலையில், கடந்த 1990ல் கட்டப்பட்ட ராஜிவ் காந்தி பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 34 கோடி செலவில் 4.41 ஏக்கர் பரப்பளவில், வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.

கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. கோர்ட் வழக்கால் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட பிரதான வணிக கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, நுழைவாயில் அருகில் தற்காலிக அமைப்பில் கட்டப்பட்ட 39 கடைகள் பழம் மற்றும் உணவு தின்பண்டங்கள் விற்கும் சிறு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

90 செ.மீ., அகலம் 2 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஒவ்வொரு கடையும் ஜி.எஸ்.டி., உட்பட 2,300 ரூபாய் மாத வாடகையில், 39 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி 39 கடைகளிலும் மின் உபகரணங்கள் பொருத்தப்பட்டு கடந்த 13 மாதங்களாக இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது.

இதனால், 14 பேர் கடைகளை திறக்காமல் உள்ளனர். மீதி உள்ள வியாபாரிகள் ரீசார்ஜ் பேட்டரி மின்சாரத்தில் கடைகளை நடத்தி வருகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில், தரம் குறைந்த மின்சார ஒயர்கள் அமைக்கப்பட்டதால் தான் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகவும், மின் ஒயர்கள் அனைத்தும் புதிதாக மாற்றினால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும். இதற்கான செலவு 15 லட்சம் ரூபாய் ஆகும் என்பதால் நகராட்சி அதிகாரிகள் மின் இணைப்பு வழங்குவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் அலட்சியமாக உள்ளனர் என, பகீர் குற்றச்சாட்டை வியாபாரிகள் காரணமாக கூறுகின்றனர்.

கடைகள் வழங்கப்பட்டு 13 மாதங்கள் ஆகியும் மின்சாரம் இல்லாததால் சிறு வியாபாரிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

எனவே, நகராட்சி அதிகாரிகள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us