/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெங்கு பரவலை தடுக்க புகை மருந்து தெளிப்பு
/
டெங்கு பரவலை தடுக்க புகை மருந்து தெளிப்பு
ADDED : செப் 28, 2024 04:26 AM

பாகூர் : பாகூரில் டெங்கு பரவலை தடுக்கும் வகையில், கொசு மருந்து புகை அடிக்கும் பணியில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில், டெங்கு, மலேரியா காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகூர் திருமால் நகர் மற்றும் காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதியில், ஊழியர்கள் வாகனத்தின் மூலமாக வீதி வீதியாக சென்று கொசு ஒழிப்பு மருந்து புகை அடித்தனர்.
தொடர்ந்து, மற்ற பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.