/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
270 லிட்டர் எரி சாராயம் கடத்தல்: கண்டமங்கலத்தில் 2 பேர் கைது
/
270 லிட்டர் எரி சாராயம் கடத்தல்: கண்டமங்கலத்தில் 2 பேர் கைது
270 லிட்டர் எரி சாராயம் கடத்தல்: கண்டமங்கலத்தில் 2 பேர் கைது
270 லிட்டர் எரி சாராயம் கடத்தல்: கண்டமங்கலத்தில் 2 பேர் கைது
ADDED : ஜூலை 31, 2025 04:06 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே 270 லிட்டர் எரி சாராயம் கடத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். கரையாம்புத்துார் பகுதியில் அரசு அனுமதி பெற்று சாராயக்கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி கிருஷ்ணாபுரம், மணமேடு பகுதியில் புதிய சாராயக்கடை ஏலம் எடுத்தார்.
இந்நிலையில் கிருஷ்ணாபுரம் மணமேட்டில் உள்ள சாராயக்கடையில் போதுமான வசதி இல்லாத நிலையில் அங்கிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 1500 பாக்கெட்டுகள் கொண்ட 270 லிட்டர் எரி சாராயத்தை ஒரு எலக்ட்ரிகல் டிரை சைக்கிளில் வைத்து கரையாம்புத்துார் சாராயக்கடைக்கு அரசு அனுமதியின்றி 5 பேர் கடத்தி சென்றனர்.
அவர்கள் தமிழக பகுதியான பேரீச்சம்பாக்கம் மலட்டாறு அருகே சென்றபோது, மத்திய நுண்ணறிவு குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அதில் 3 பேர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
மணமேட்டை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சாரதி 19; அதே பகுதியை சேர்ந்த பரந்தாமன் மகன் பாலசந்தர் 28 ஆகிய இருவரையும் கைது செய்து, 270 லிட்டர் எரி சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, கண்டமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தப்பியோடிய சாராயக் கடை உரிமையாளர் கிருஷ்ணராஜ், கரையாம்புத்துார் நாகப்பன் மகன் அமிர்தராஜ், அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த பரந்தாமன் மகன் ஆனந்த் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.