/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரி கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்
/
ஏரி கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்
ஏரி கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்
ஏரி கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்
ADDED : ஜூலை 22, 2025 07:29 AM
பாகூர்,: கிருமாம்பாக்கம் ஏரி கரையை உடைத்து, பனை மரங்களை வெட்டியவர்கள், மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருமாம்பாக்கத்தில் பெரிய ஏரி, சின்ன ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகள், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்று வட்டார கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. இதனிடையே, சமீப காலமாக பெரிய ஏரியில், நீர் பிடிப்பு பகுதி மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது.
கடந்த 14ம் தேதி கிருமாம்பாக்கம் பெரிய ஏரியின் தெற்கு கரையில் இருந்த 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டப்பட்ட நிலையில், கரை பகுதியில் சுமார் 10 மீட்டர் அளவிற்கு பள்ளம் தோண்டி, பாலம் அமைக்க முயற்சி செய்துள்ளனர்.
சார்காசிமேடு கிராம மக்கள் பணியை தடுத்தி, கரையை சீர்செய்து மீண்டும் அங்கு, பனை விதைகளை நடவு செய்து, இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இது குறித்து பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகளிடம் கேட்ட போது, இது தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறுகின்றனர்.
இப்பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு, அரசியல் பிரமுகர்கள் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
விதிகளை மீறி கிருமாம்பாக்கம் பெரிய ஏரியில் கரையை உடைத்து பாலம் கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்திட வேண்டும்.
உடைக்கப்பட்ட கரையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், பனை மரங்களை வெட்டி, கரைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக, சமூக ஆர்வலர்களும், அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

