/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு கல்லுாரியில் சமூகவியல் சங்கம் துவக்கம்
/
தாகூர் அரசு கல்லுாரியில் சமூகவியல் சங்கம் துவக்கம்
தாகூர் அரசு கல்லுாரியில் சமூகவியல் சங்கம் துவக்கம்
தாகூர் அரசு கல்லுாரியில் சமூகவியல் சங்கம் துவக்கம்
ADDED : செப் 05, 2025 02:51 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், சமூகவியல் சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது.
விழாவில், சமூகவியல் துறைத் தலைவர் ஹெப்சிபா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கருப்புசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, தாகூர் கலை அறிவியல் கல்லுாரியின் முன்னாள் மாணவரும், புதுச்சேரி சிறைச்சாலை கண்காணிப்பாளருமான பாஸ்கரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கல்லுாரி முதல்வர் கருப்புசாமி சமூகவியல் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். விழாவில், சமூகவியல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.