/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் சாப்ட்வேர் பயிலரங்கம்
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் சாப்ட்வேர் பயிலரங்கம்
ADDED : பிப் 19, 2025 07:08 AM

புதுச்சேரி: எம்.ஐ.டி., கல்லுாரியில் ஐ.டி துறையின் 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' மற்றும் 'சாப்ட்வேர் டெஸ்ட்டிங்' அறிவு சார் பயிலரங்கம் நடந்தது.
புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேலைவாய்ப்பு துறை மற்றும் ஐ.சி.டி., அகாடமியுடன் இணைந்து இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான பயிலரங்கம் எம்.ஐ .டி., கல்லுாரியில் நடத்தன.
பயிலரங்கத்தை எம்.ஐ.டி., கல்லுாரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். ஐ.சி.டி., பயிற்சியாளர்கள் ராஜீவி மற்றும் ரோஸ்லின் ஷீலா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
ஐ.சி.டி., இணை செயலாளர் அழகிரி, ஐ.சி.டி ஒருங்கிணைப்பாளர் ஜெய்ரஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.