/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹைமாஸ் கம்பத்தை சுற்றி மண் அரிப்பு ஹெலிபேடு மைதானத்தில் திக்..திக்....
/
ஹைமாஸ் கம்பத்தை சுற்றி மண் அரிப்பு ஹெலிபேடு மைதானத்தில் திக்..திக்....
ஹைமாஸ் கம்பத்தை சுற்றி மண் அரிப்பு ஹெலிபேடு மைதானத்தில் திக்..திக்....
ஹைமாஸ் கம்பத்தை சுற்றி மண் அரிப்பு ஹெலிபேடு மைதானத்தில் திக்..திக்....
ADDED : அக் 22, 2025 05:46 AM

புதுச்சேரி: ெஹலிபேடு மைதானத்தில் ைஹமாஸ் விளக்கு கம்பம் சாய்ந்து விழும் நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
லாஸ்பேட்டை, ெஹலிபேடு மைதானத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங் செல்கின்றனர். நுற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ெஹலிபேடு மைதானம் வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடந்தது. அதையடுத்து ெஹலிபேடு மைதானத்தில், புதிய சாலை அமைக்கப்பட்ட ஐந்து இடங்களில் பொதுப்பணித் துறை சார்பில், ைஹமாஸ் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
இந்த ைஹமாஸ் விளக்குகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுத்து மைதானம் ஜொலிக்கிறது. பொதுமக்கள் நிம்மதியாக வாங்கிங் செல்கின்றனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக ைஹமாஸ் கம்பங்களை சுற்றியுள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, ஏர்போர்ட் எதிரில், பொதுமக்கள் யோகா பயிற்சி செய்யும் இடத்தில் உள்ள ைஹமாஸ் விளக்கின் அடியில் கடுமையாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஹைமாஸ் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் நிலையில் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
ைஹமாஸ் கம்பம் சாய்ந்து கீழே விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விபரீதம் நடக்கும் முன் ைஹமாஸ் விளக்கு கம்பங்களை சுற்றிலும் மண் அரிப்பு ஏற்படாத வகையில் பலப்படுத்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.