ADDED : அக் 16, 2026 07:54 PM
புதுச்சேரி.: புதுச்சேரி மின்துறை சார்பில், கருவடிக்குப்பத்தில் இன்று சூரிய சக்தி முகாம் நடக்கிறது.
மத்திய அரசின் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ், கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் சூரிய சக்தி முகாம் இன்று (17ம் தேதி) காலை 11:00 மணியளவில் நடக்கிறது.
முகாமில், வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதன் பயன்கள், மானிய உதவிகள், விண்ணப்பிக்கும் முறைகள், வங்கி கடன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சூரிய மின்சக்தி அமைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு மானியம் வழங்ப்படுகிறது.
1 கிலோ வாட் சூரிய மின் சக்தி அமைக்க மத்திய அரசு 30 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
3 கிலோ வாட் அமைக்க மத்திய அரசு 78 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. எனவே தகுதியுள்ள மின் நுகர்வோர்கள், முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.
