தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சோலார் திட்ட சிறப்பு முகாம் பாகூரில் நாளை நடக்கிறது

சோலார் திட்ட சிறப்பு முகாம் பாகூரில் நாளை நடக்கிறது

சோலார் திட்ட சிறப்பு முகாம் பாகூரில் நாளை நடக்கிறது


ADDED : ஆக 21, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாகூரில் நாளை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

மின்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையுடன் இணைந்து வீட்டு மேற்கூரைகளின் மேல் சூரிய ஒளி மின்நிலையம் நிறுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்கள் அறிந்து கொண்டு, இந்த திட்டத்தில் சேருவதற்கான விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது. பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் மூலம் இந்த முகாம் நாளை காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பாகூர், கமலா நேரு கல்யாண மண்பத்தில் நடக்கிறது. இந்த திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.

இந்த திட்டத்தில் தற்போது வரை 1,410 நுகர்வோர் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவியுள்ளனர். இவர்களுக்கு ரூ.9.98 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று திட்ட பயன்களை அறிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு மொபைல் 9489080373, 9489080374 மற்றும் ee2ped@py.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us