தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

 திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

 திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூன் 12, 2026 08:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 08:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

உள்ளாட்சி துறை இயக்குநர் ஆதர்ஷ் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு முன்னிலை வகித்தார். பேரணியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பேரணி ரெட்டியார்பாளையம் ஜவகர் நகரில் உள்ள உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் துவங்கி, இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம் வழியாக ராஜிவ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வரை நடந்தது.

பேரணியில், மாணவர்கள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், குப்பைகளை தரம் பிரித்து சேகரித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் தூய்மையான நகரத்தை உருவாக்குதல் போன்றவற்றை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி, முழக்கங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us