தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திடக்கழிவு மேலாண்மை அரசு அதிகாரிகள் ஆய்வு

 திடக்கழிவு மேலாண்மை அரசு அதிகாரிகள் ஆய்வு

 திடக்கழிவு மேலாண்மை அரசு அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜூன் 01, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திடக்கழிவு மேலாண்மை குறித்து உள்ளாட்சி புதுச்சேரியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் முதல் அமலுக்கு வந்துள்ளன.

இவ்விதிகள், திடக்கழிவு மேலாண்மையை வெறும் குப்பை சேகரிப்பு நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், பொறுப்புள்ள குடிமக்கள் பங்கேற்பு மற்றும் அறிவியல் முறையிலான கழிவு செயலாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சட்டப்பூர்வ கட்டமைப்பாக மாற்றுகின்றன.

இந்தப் புதிய சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், மொரிஸான் தோட்டம் மற்றும் தந்தை பெரியார் நகர் பகுதிகளில் இந்த கள ஆய்வு நடந்தது.

உள்ளாட்சித் துறை செயலர் கேசவன், உள்ளாட்சித் துறை இயக்குநர் ஆதர்ஷ், மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு அப்பகுதி மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். வீடு தோறும் குப்பை சேகரிப்பு சேவையின் செயல்பாடு, சேகரிப்பு நேரங்கள் மற்றும் பணி நேர அடிப்படையிலான துப்புரவுப் பணியாளர்களின் பணி நிலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

குப்பை சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் நேரடியாகக் கருத்துகள் பெறப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us