/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு; அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆலோசனை

ADDED : பிப் 14, 2024 03:34 AM

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் குடி தண்ணீர் பிரச்னை குறித்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உமாபதியை சந்தித்தார். அப்போது அவரிடம், 'பழைய பைப் லைன்களை எடுத்து புதிதாக குடிநீர் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.
வாணரப்பேட்டை, தாமரை நகரில் ஆழ்துளை கிணறு பணி முடிந்து விட்டது. தற்பொழுது அங்கு பொது மக்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இதனை உடன் சீர் செய்யவேண்டும்.
தாவரவியல் பூங்கா ஆட்டுப்பட்டியில், பணிகள் முடிந்து இன்னும் மின் இணைப்பு கொடுக்க வில்லை. மின் இணைப்பு உடனடியாக பெற்று தடையில்லா குடிதண்ணீர் வழங்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,' என அறிவுறுத்தினார்.
மேலும், அவர் 'தாமரைநகர், தமிழ்தாய் நகர், காளியம்மன் தோப்பு, முருகசாமி தோப்பு ஆகிய பகுதியில் தடையில்லா குடிநீர் கிடைக்க வேண்டும்,' என வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில், இளநிலை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் நோயல், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.