தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்கூட்டி மீது பஸ் மோதல் தாய் கண் முன் மகன் பலி

 ஸ்கூட்டி மீது பஸ் மோதல் தாய் கண் முன் மகன் பலி

 ஸ்கூட்டி மீது பஸ் மோதல் தாய் கண் முன் மகன் பலி


ADDED : ஜன 31, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் ஸ்கூட்டி மீது பஸ் மோதி 3ம் வகுப்பு மாணவர் இறந்தார்.

லாஸ்பேட்டை, பொதிகை நகரை சேர்ந்தவர் ஜோதிலிங்கம், பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த ஊழியர். இவரது மகன் ரட்சகன், 8; நாவற்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து ரட்சகனை, அவரது தாய் கஸ்துாரி தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் அரங்கனுாரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த, அரசு மாணவர் சிறப்பு பஸ், கஸ்துாரி ஸ்கூட்டி மீது மோதியது.

கீழே விழுந்து படுகாயமடைந்த கஸ்துாரி, அவரது மகன் ரட்சகன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மருக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, டாக்டர் பரிசோதித்து ரட்சகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து டிரைவர் பாலமுருகன் மீது வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us