/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாமனார் பணி நிறைவு விழாவிற்கு வந்த மருமகன் விபத்தில் பலி வில்லியனுார் அருகே சோகம்
/
மாமனார் பணி நிறைவு விழாவிற்கு வந்த மருமகன் விபத்தில் பலி வில்லியனுார் அருகே சோகம்
மாமனார் பணி நிறைவு விழாவிற்கு வந்த மருமகன் விபத்தில் பலி வில்லியனுார் அருகே சோகம்
மாமனார் பணி நிறைவு விழாவிற்கு வந்த மருமகன் விபத்தில் பலி வில்லியனுார் அருகே சோகம்
ADDED : ஜன 23, 2025 05:11 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே பணி நிறைவு பெறும் மாமனார் கொடுத்த விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிக்கு வந்த மருமகன் பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ்; பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம், பத்துக்கண்ணு அலுவலகத்தில் ஒர்க் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இம்மாதத்துடன் பணி நிறைவு பெறுவதால் உடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேற்று மதியம் பத்துக்கண்ணு அலுவலகத்தில் விருந்து உபசரிப்பு நடத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு ராமதாஸ் மூத்த மருமகன், மைலம் அருகே உள்ள நல்லாமூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஜெயகிருஷ்ணராசு, 40, தனது குடும்பத்துடன் வந்து மாமனாரை வாழ்த்திவிட்டு, விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பிற்பகல் 2:45 மணியளவில் கூடப்பாக்கத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று மீண்டும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு ேஹாண்டா புரோ (பி.ஒய்.01 பிவி. 4196) பைக்கில் பத்துக்கண்ணு அலுவலகம் நோக்கி போக்குவாய்க்கால் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த யமாஹா ஆர்15 பைக் ( பிஒய் 05. விடி-3603) ஜெயகிருஷ்ணராசு பைக் மீது மோதியதில், அவர் துாக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மாமனார் ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

