ADDED : செப் 09, 2025 06:39 AM
அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன், 34; இவருக்கும், கடலுார் அடுத்த தம்பிபாளையத்தை சேர்ந்த மதி இவரது மகள் மகாதேவிக்கும், கடந்த 2023ம் ஆண்டு கோவிலில் திருமணம் நடந்தது.
தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி, வீட்டில் இருந்த அவரது மனைவி மாயமானார்.
அதையடுத்து, வைத்தியநாதன் தவளக்குப்பம் போலீசில் நேற்று புகார் செய்தார். அதில், மாயமான எனது மனைவிக்கு தற்போது 17 வயது நிறைவடைகிறது. திருமணம் செய்த போது, 20 வயது முடிந்துள்ளதாக , ஏமாற்றி எனக்கு திருமணம் செய்து வைத்த, மாமியார் பேபி, அவரது மகன்கள் மற்றும் மனைவியை, பூரணாங்குப்பத்தை சேர்ந்த தனஞ்செயன், அவரது தாய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.