/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா
/
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார பிரமோற்சவ விழா
ADDED : அக் 16, 2025 11:33 PM
புதுச்சேரி: சாரம் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாக முத்துமாரியம்மன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரமோற்சவ விழா வரும் 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.
அதையொட்டி, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை நடக்கிறது. 22ம் தேதி முதல் வரும் 3ம் தேதி வரை அம்மனுக்கு தினமும் காலை அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 22ம் தேதி காலை 10:30 மணிக்கு காப்பு கட்டுதலை தொடர்ந்து, கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
27ம் தேதி 6ம் நாள் இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹார உற்சவம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா, சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31ம் தேதி மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 3ம் தேதி காலை 8:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்துள்ளார்.