ADDED : அக் 28, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள 9 அடி உயர சண்முக சுப்ரமண்ய சுவாமிக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 9 மணி முதல் 30 வகையான அபிேஷகங்கள் நடந்தது.
தொடர்ந்து, புஷ்ப அலங்காரத்தில் சத்ரு சம்ஹார சுப்ரமண்ய சுவாமிக்கு சோடச உபசார தீபாராதனை நடைபெற்றது. சிதம்பரம் கீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

