/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்மண்டல ஹாக்கி போட்டி; வாரியர் அணி சாம்பியன்
/
தென்மண்டல ஹாக்கி போட்டி; வாரியர் அணி சாம்பியன்
ADDED : ஜூன் 05, 2025 07:34 AM

அரியாங்குப்பம்; தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில், அபிேஷகப்பாக்கம் வாரியர் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
புதுச்சேரி ஹாக்கி டெலவலப்மெண்ட் சொசைட்டி சார்பில், தென் மண்டல அளவில், ஐவர் ஆண்கள் ஹாக்கி போட்டி, அபிேஷகப்பாக்கம் சேத்திலால் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில் கலந்து கொண்ட அபிேஷகப்பாக்கம் வாரியர் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை பி.எச்.எஸ்., அணியும், மூன்றாம் இடத்தை எம்.ஜி.ஆர்., பாலக்கோடு, அணியும், 4ம் இடத்தை, ஜேம்ஸ் ஹாக்கி கிளப் அணியும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சபாநாயகர் செல்வம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், லே புதுச்சேரி ஹாக்கி சேர்மன் லட்சுமிநாராயணன், பயிற்சியாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர், பரிசு பெற்ற அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.